திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஜூலை 2022 (19:09 IST)

இத்தாலி பிரதமர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

italy pm
இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ டிராகி  திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2021 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் பிரதமராக மரியோ டிராகி என்பவர் பதவி ஏற்றார்
 
பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தாலியில் கடந்த சில மாதங்களாக விலைவாசி உயர்ந்து உள்ளது. இதனால் பிரதமருக்கு கடும் எதிர்ப்புகள் நடந்த நிலையில் சில கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றன
 
இதனை அடுத்து பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மரியோ டிராகி அறிவித்துள்ளார். இதனால் அந்நாட்டில் மீண்டும் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது.