இங்கிலாந்தில் முழு ஊரடங்கில் தளர்வு: பார்களுக்கு குவிந்த பொதுமக்கள்!
இங்கிலாந்தில் முழு ஊரடங்கில் தளர்வு: பார்களுக்கு குவிந்த பொதுமக்கள்!
இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்ததையடுத்து முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வரும்போது மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் நாடு முழுவதும் வீட்டிலேயே மக்கள் முடங்கி கிடந்தனர்
இந்த நிலையில் தற்போது அந்நாட்டில் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கூண்டில் அடைபட்ட பறவைகள் வெளியேறுவது போல் மக்கள் வெளியேறி சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றனர். குறிப்பாக பார்கள், உணவு விடுதிகள் கேளிக்கை விடுதிகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
நேற்று முதல் அத்தியாவசிய பணிகள் இல்லாத அனைத்து வணிகங்களும் செயல்பட இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.இதனை அடுத்து மக்கள் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து அரசு பொதுமக்களிடம் வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் உணவு விடுதிகளில் பொதுமக்கள் குவிந்ததால் அங்குள்ள ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது