1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 28 ஜனவரி 2024 (15:31 IST)

வேர்க்கடலை சேர்க்கப்பட்ட பிஸ்கெட் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்ப்பு: அதிர்ச்சி சம்பவம்

வேர்க்கடலையில் செய்யப்பட்ட பிஸ்கட்டை சாப்பிட்ட இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் நடன கலைஞராக இருந்தார். அவர் சமீபத்தில்  வெளியூர் செல்லும்போது பிஸ்கட் ஒன்றை சாப்பிட்டார். அந்த பிஸ்கட் சாப்பிட்டவுடன் திடீரென அவருக்கு அலர்ஜி ஏற்பட்டதை அடுத்து அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 
 
இதனை அடுத்து அவர் சாப்பிட்ட பிஸ்கட்டில் வேர்க்கடலை சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பிஸ்கட் பாக்கெட்டில் வேர்க்கடலை குறித்து எதுவும் குறிப்பிடாததால் அவர் தெரியாமல் அந்த பிஸ்கட்டை சாப்பிட்டதாக தெரிகிறது. அவருக்கு சில ஆண்டுகளாக வேர்க்கடலை அலர்ஜி என தெரிகிறது.
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 
Edited by Mahendran