மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயார்: எலான் மஸ்க் அறிவிப்பு..!
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்
இந்தியா உள்பட பல நாடுகள் விண்வெளிக்கு விண்கலங்களை அனுப்பி வருகிறது என்பதும் வெற்றிகரமாக பல சாதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இந்தியா சமீபத்தில் அனுப்பிய சந்திராயன் 3 மற்றும் ஆதித்யா எல்ஒன் ஆகியவை உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது
இந்த நிலையில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் இந்த விண்கலம் மனிதர்களை ஏற்றுக் கொண்டு விண்வெளிக்கு செல்லும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran