1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (11:48 IST)

தீராத விளையாட்டு பிள்ளை.. 9வது குழந்தைக்கு அப்பாவான எலான் மஸ்க்!

பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் தனது நிறுவன பணிப்பெண்ணுடனான தொடர்பில் குழந்தைக்கு அப்பாவாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ட்விட்டர் என உலகம் முழுவதும் பல நிறுவனங்களை நடத்தி வரும் உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். பிரபல தொழிலதிபராக மட்டுமே தெரிந்த எலான் மஸ்க்கின் மன்மத முகம் சமீபத்தில் வெளிபட்டுள்ளது.

எலான் மஸ்க்கிற்கு ஜஸ்டின் வில்சன் என்ற பெண்ணுடன் திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளன. பின்னர் பிரபல கனடா பாடகி கிரிமிஸுடன் பழகி வந்த எலான் அவர் மூலமாக இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். இந்நிலையில் தனது நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு பிரிவின் திட்ட இயக்குனராக பணியாற்றிய ஷிவோன் சிலிஸுடன் தொடர்பில் இருந்த எலான் மஸ்க் அவர் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதமே குழந்தைகள் பிறந்துவிட்டதாகவும் ஏப்ரல் மாதத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைத்தபோது அளித்த ஆவணங்களின்படி இந்த செய்தி கசிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் எலான் மஸ்க்கின் குழந்தைகள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.