வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:31 IST)

மீண்டும் டுவிட்டருக்கு குருவி லோகோ.. எலான் மஸ்க் திடீர் முடிவு..!

elan twitter
ட்விட்டர் ஆரம்பித்த காலத்திலிருந்தே குருவி என்ற லோகோ பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென நாய் லோகோவை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மாற்றினார். அவருடைய இந்த முடிவுக்கு ட்விட்டர் பயனாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் தற்போது மீண்டும் குருவி லோகோ பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பதும் அதன் பிறகு அவர் அதில் பல அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வந்தார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டாக் காயின் என்ற  கிரிப்டோ கரன்சி லோகோவான நாய் லோகோவை எலான் மஸ்க் டுவிட்டருக்கு வைத்தார். இந்த புதிய லோகோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மீண்டும் குருவி ட்விட்டர் லோகோவாக எலான் மஸ்க் மாற்றி உள்ளார். இதனை அடுத்த ட்விட்டர் பயனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Edited by Siva