என் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது… ஹாரிஸ் ஜெயராஜ் பதிவு!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக 2000 ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன், ஜீவா, கே வி ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களுடன் இணைந்து கொடுத்த ஹிட் பாடல்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு திடீரென குறைய ஆரம்பித்தது. இதே போல அவரது பாடல்கள் பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டும், அவரின் சம்பளம் அதிகம் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.
இப்போது சினிமா கேரியரில் ஒரு சிறு பின்னடைவை அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “நண்பர்களே, என்னுடைய டிவிட்டர் கணக்கு கடந்த இரண்டு நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. கணக்கை மீட்டதும் மீண்டும் அப்டேட் செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ், தற்போது துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.