1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (22:22 IST)

இரண்டாம் எலிசபெத் உடலுக்கு 19 ஆம் தேதி இறுதிச் சடங்கு! பொதுவிடுமுறை அறிவிப்பு

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு  19 ஆம் தேதி இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளதால் அன்று  பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) முதுமையால் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு  உலகத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும், மக்களும் அஞ்சலியும் இரங்களும் தெரிவித்தனர்.

அவரது உடல்  கடந்த 11 ஆம் தேதி பால்மோரல் கோட்டையில் இருந்து எடுத்துச் செல்லபப்ட்டு, எடின்பர்க்கில் உள்ள ஹோலிவுட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது.  நேற்று செயிண்ட் கில்ஸ் தேவாலயத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்ட வழிபாடு  நடத்தப்பட்டது.

மக்களும் திரளாய் வந்து அஞ்சலி செலுத்தினர்.   நாளை பங்கிங்காம் அரண்மனையில் ராணியில் உடல் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

மேலும், வரும் 18 ஆம் தேதி இங்கிலாந்து  நாடு முழுவதும் இரவு 8 மணிக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தவுள்ளனர். 19 ஆம் தேதி இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளதால் அன்று  பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.