பூனையை காப்பாற்ற சிறுவனை கயிற்றில் கட்டி தொங்கவிட்ட பாட்டி.. வைரல் வீடியோ
பூனையை காப்பாற்ற பாட்டி, 7 வயது சிறுவனை கயிற்றில் கட்டி 5 ஆவது மாடியில் இறக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பூனையை காப்பாற்ற 7 வயது சிறுவனை ஐந்தாவது மாடியில் கயிற்றில் கட்டி கீழே இறக்கிய வீடியோ காண்போரை கதிகலங்க வைத்துள்ளது. பூனையை காப்பாற்ற சிறுவனை கயிறு கட்டி இறக்கிய பாட்டியை இணையத்தில் பலரும் திட்டி வருகின்றனர்.
சிறுவன் பத்திரமாக மேலே இழுக்கப்பட்டாலும் இதில் எதுவும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் சிறுவனின் நிலைமை என்னாவது என பலரும் தங்களுடைய பதற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.