1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (17:45 IST)

'ரயில்வே லெவல் கிராஸிங்'கை மூட கீழே இறங்கிய ரயில் ஓட்டுநர் ... வைரல் வீடியோ

ரயில்வே கிராஸிங் உள்ள பகுதிகளில் பெரும்பாலும் ஒரு கேட் இருக்கும். சரியாக ரயில் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்  அங்குள்ள பணியாளர் கேட்டை அடைத்துவிடுவார். அதனால் அந்த வழியில் செல்ல வேண்டிய வாகனங்கள் மற்றும் நடைபாதை சாரிகள் ரயில் கிளம்பிய பின் அங்கிருந்து செல்வார்கள்.
இந்நிலையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை ரயிலை இயக்கிய ரயில் ஓட்டுநர், குறிப்பிட்ட லெவல் கிராஸ் வந்தது, அங்கு திறந்திருந்த லெவல் கிராஸிங் திறந்து இருப்பதைப் பார்த்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படமால் இருக்க, அவரே ரயிலை நிறுத்திவிட்டு  கீழே இறங்கியுள்ளார்.
 
பின்னர், அந்த லெவல் கிராசிங்கை மூடிவிட்டு, ரயிலை இயங்கினார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 
 
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.