வெனிசுலாவில் நிலநடுக்கம் – மக்கள் பீதி
வெனிசுலா நாட்டில் நேற்று பின்மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது.
வெனிசுலா நாட்டில் உள்ள சாண்டியாகோ நகருக்கு அருகில் 4 கி.மீ. தொலைவில் கேரபோவா என்னும் பகுதி உள்ளது. அங்கு நேற்று (வியாழன்) மதியம் 2.29 க்கு அங்கு லேசான நில அதிர்வினை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் மக்கள் உஷாராகி வீடுகளை விட்டு வெட்டவெளிக்கு ஓடியுள்ளனர்.
ஆனால் இந்த நிலநடுக்கம் வெறும் 6 நொடிகளே நீடித்ததாகவும் இதன் ஆழம் 10 கி,மீ, எனவும் அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிதமான நிலநடுக்கமான இந்த சம்பவத்தால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று வெனிசுலா ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.