செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (09:07 IST)

அஜித்தின் அடுத்த படத்தில் நஸ்ரியாவின் கேரக்டர் இதுதான்

தல அஜித் நடிக்கவுள்ள 59வது படமான 'தல 59' படத்தில் நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் இன்னும் இந்த செய்தியை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. ஆனால் நஸ்ரியா நேற்று இந்த தகவலை தனது டுவிட்டரில் உறுதி செய்துவிட்டார்.

'தல 59' படத்தில் தான் ஸ்வேதா என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இந்த கேரக்டரில் நடிப்பது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கவுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் முக்கிய கேரக்டரா என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே