செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 26 அக்டோபர் 2019 (09:57 IST)

அமெரிக்க அதிபரின் “தீபாவளி விஷஸ்” ..

உலகமெங்கும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வருகிற 27 ஆம் தேதி உலமெங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் தனது தீபாவளியை முன்னதாகவே கொண்டாடினார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ”தீப ஒளி திருநாள் என்பது, அமெரிக்காவின் மதங்களின் மீதான சுதந்திரத்தன்மையை நினைவுப்படுத்தும் ஒரு நிகழ்வு எனவும், நமது அரசாங்கம், நமது அரசியல் அமைப்பு சட்டத்தின்பால் மக்களின் மத உணர்வையும் நம்பிக்கையையும் பாதுகாக்கும்” எனவும் கூறினார்.

மேலும், அமெரிக்கா மட்டுமல்லாத உலகமெங்குமுள்ள ஹிந்துக்கள், ஜெயினர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் அனைவருக்கு இந்த தீப திருநாளில் தீமை ஒழிந்து நன்மை ஓங்கட்டும்” எனவும் டிரம்ப் கூறினார். முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தீபாவளி வாழ்த்துகள் கூறிய நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.