வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (18:08 IST)

கவர்ச்சி நடனம் ஆட தெரியுமா...? தொகுப்பாளர் கேட்ட கேள்வியால் கலங்கிய வீராங்கனை

பிரான்ஸ் நாட்டின் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலொன் டி ஓர் விருதுக்கு இந்த ஆண்டு குரோஷியா கால்பந்து அணியின் கேப்டன்(ஆண்கள் ) லூக்கா பெற்றார்.
இந்நிலையில் பெண்களுக்கான பலோன் டி ஆர் விருதுக்கு நார்வே வீராங்கனை அடா ஹிர்ஜெர்பர் இந்த ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையகா  தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் விருது வழங்கும் விழாவில் பங்குபெற்ற அடா ஹிர்ஜெர்பர்கிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களுக்கு கவர்ச்சியாக நடனம் ஆட தெரியுமா என கேட்டுள்ளார்.
 
அதற்கு பதிலளிக்காமல் முகத்தில் லேசாக சுளித்துக் கொண்ட வீராங்கனை அடா, விருதை மட்டும் வாங்கிச் சென்றுள்ளார்.
 
இந்தக் கேள்வி கேட்டவர்  நிகழ்ச்சி தொகுப்பாளரான மார்டின் சொல்வேஜ் என்பவர் ஆவார்.
ஆண்களுக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது முதன் முதலாக பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் ஆண் தொகுப்பாளர் இக்கேள்வியை கேட்டுள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.