புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (14:46 IST)

4000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்த விவாகரத்து வழக்கம்...

இந்த காலத்தில் திருமணம் செய்துக்கொளவதும் பின்னர் விவாகரத்து பெருவதும் சாதாரணமாகிவிட்டது. ஆனால், இந்த விவாகரத்து வழக்கம் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது. 


 
 
துருக்கி காரன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் திருமண விவாகரத்து பட்டையம் ஒன்றை கண்டறிந்துள்ளனர். 
 
இது 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தம்பதியரின் விவாகரத்து பட்டையம் என கணிக்கப்பட்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன் அசிரியான் பகுதியில் வாழ்ந்த லாகிப்யூம் மற்றும் அவரது மனைவி காடலாவின் விவாகரத்து பட்டையம் இது. 
 
அந்த பட்டையத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதாம். கடாலாவிற்கு குழந்தை பிறக்காததால் அவர் தனது கணவருக்கு வேறோரு திருமணம் செய்து வைக்க சம்மதம் வழங்கியுள்ளார். 
 
என்வே, ஒப்பந்தத்தின் படி லகுபியும் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அவர் கடலாவிற்கு வெள்ளி வழங்க வேண்டும். கடாலா விவாகரத்து வழங்கினால் அவர் லகுபியுமிற்கு வெள்ளி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.