ரஷ்யாவில் சேவையை நிறுத்திக்கொண்ட டிஸ்னி, சோனி!
ரஷ்யாவின் போர் செயலை கண்டித்து பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் சேவை மற்றும் விற்பனையை நிறுத்தி வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.
மேலும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் சேவை மற்றும் விற்பனையை நிறுத்தி வருகின்றன. முன்னதாக ஆப்பிள், சாம்சங், ஐபிஎம், மெக் டோனல்டு, ஸ்டார்பக்ஸ், நெட்பிளிக்ஸ், கோகோ கோலா, பெப்சி, KFC, பீட்சா ஹட் போன்ற நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்துவதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து ரஷ்யாவில் திரைப்பட வெளியீட்டையும், வணிகங்களையும் நிறுத்திக் கொள்வதாக டிஸ்னி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பிரபல மியூசிக் நிறுவனமான சோனியும் சேவையை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளது.