புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 16 ஜனவரி 2019 (12:34 IST)

காதலனை கட்டிப்பிடித்த பெண்ணுக்கு என்ன நடந்தது தெரியுமா...?

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஒரு பிரபலமான பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர், தன்னிடம் காதலை சொல்ல வந்த ஆணை கட்டிப்பிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.
சென்ற மாதத்தில் கெய்ரோவில் உள்ள ஒரு பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு மாணவி நின்று கொண்டிருக்கும் போது ஒரு இளைஞன் கையில் பூவுடன் வந்து அந்த பெண்ணின் முன்பு மண்டியிட்டு தன் காதலை வெளிப்படுத்துகிறார். உடனே அப்பெண் காதலரை கட்டிப்பிடிக்கிறார்.

பலபேர் படிக்கும் பல்கலைக்கழகம் என்று கருதாமல் மாணவி இவ்வாறு செய்ததை வீடியோ மூலமாக பார்த்த பல்கலைக்கழக நிர்வாகம்  அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை பல்கலையிலிருந்து நீக்கியுள்ளது.
 
இந்நிலையில் அந்தப் பெண்  நீதிமன்றம் மூலம் தீர்வு காணப் போகிறார் என தகவல் வெளியாகிறது.