வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (19:02 IST)

199 கோடி ரூபாய்க்கு ஏலம்போன சின்னஞ்சிறிய வைரக்கல் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சுவிட்சர்லாந்து நாட்டில் சோத்பை என்ற ஏல நிறுவனம் வைரக்கல் ஒன்றை இந்திய மதிப்பில் 199 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ரஷ்யாவின் வைர சுரங்கத்திலிருந்து அரியவகை ஊதா நிற வைரக்கல் வெட்டி எடுக்கப்பட்டது. இதன் மொத்த எடை 14.83 காரட். உலகிலேயே மிகவும் அரிய வகை வைரங்களில் ஒன்றான இதை சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சௌத்பை என்ற ஏல நிறுவனம் ஏலத்தில் விட முடிவு செய்தது.

16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆரம்ப விலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் 26.6 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் முடிந்துள்ளது. ஆனால் இதை ஏலத்தில் எடுத்தவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை. இந்த வைரத்தின் மதிப்பு வரும்காலத்தில் மேலும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது.