ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (17:35 IST)

பாராசிட்டமால் மாத்திரைகளால் நெஞ்சுவலி, ரத்த அழுத்தம்?

பாராசிட்டமால் மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்வது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

 
கொரோனா வைரஸ் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு சிலர் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பாக வெளி நாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்கள் தங்களுடைய உடல் வெப்பநிலையை குறைத்து காட்டுவதற்காக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் முன்னர் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில் பாராசிட்டமால் மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்வது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாராசிட்டமால் மாத்திரைகளை தினந்தோறும் பயன்படுத்துவது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், நெஞ்சுவலியையும் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். நோயாளிகளுக்கு இம்மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.