1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 மார்ச் 2025 (11:01 IST)

எக்ஸ் தளத்திற்கு எதிராக சதி செய்யும் நாடுகள்.. எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ் தளத்திற்கு எதிராக ஒரு பெரிய குழு அல்லது சில நாடுகள் செயல்பட்டு வருகிறது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று மதியம், திடீரென எக்ஸ் தளம் முடங்கிய நிலையில், மிகப்பெரிய பொறியியல் வல்லுநர்களை வைத்து 15 நிமிடத்தில் சரி செய்யப்பட்டது. இருப்பினும், உலக அளவில் எக்ஸ் தளம் சில நிமிடங்கள் முடக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
 
இது குறித்து எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நிறுவனத்திற்கு எதிராக ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இன்னும் தாக்குதல் திட்டமிடப்பட்டு வருகிறது. நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டு வருகிறோம். எங்களுக்கு எதிராக நிறைய ஹேக்கர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பெரிய குழு, அல்லது ஒரு நாடு, அல்லது சில நாடுகள் இந்த சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், சைபர் தாக்குதல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
 
நேற்றைய தினம் எக்ஸ் திடீரென முடங்கியதை அடுத்து, பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உலக அளவில் முன்னணி சமூக வலைதளமாக இருக்கும் எக்ஸ் தளத்திற்கு சைபர் தாக்குதல் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran