ஆண்கள், பெண்களை பிரிக்க Screen - தாலிபன்கள் பலே ஐடியா!
ஆப்கானில் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு நடுவே திரை அமைத்து வகுப்புகள் நடத்தப்படுகிறது.
அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய நிலையில் தாலிபான்கள் மொத்த நாட்டையும் கைப்பற்றியுள்ளனர். ஆனால் இன்னும் அங்கு ஒரு நிலையான ஆட்சி மற்றும் ஆட்சியாளர்கள் நியமிக்கப்படாத சூழல் உள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம், காபூலில் உள்ள அவிசென்னா பல்கலைகழகத்தில் உள்ள வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே திரை ஒன்று வைக்கப்பட்டுள்ள புகைப்படம் தான் அது.
முன்னதாக மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே வகுப்புகள் ஒதுக்கப்படும் என தாலிபன்கள் கூடிய நிலையில் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக இவ்வாரு திரை அமைக்கப்பட்டு பாடம் எடுக்கப்படுகிறதாம்.