செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2020 (15:25 IST)

கொரோனா அரக்கனிடம் இருந்து தப்பிய அந்த 12 நாடுகள் எவை?

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 12 நாடுகள் தப்பியுள்ளது அதிர்ச்சிகரமான ஒன்றாக உள்ளது. 
 
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் தனது கொடிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கொரோனாவால் உலகம் முழுவதும் 8,58,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 42,151 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்தியாவில் இன்றைய  நிலவரப்படி 1637 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 133 பேர் குணமடைந்துள்ளனர். 1466 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
ஆனால், ஆப்ரிக்க கண்டத்தை  சேர்ந்த 7 நாடுகளிலும், ஆசிய கண்டத்தை சேர்ந்த 5 நாடுகளிலும் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது மகிழ்ச்சியான தகவல் தான் என்றாலும் வியப்பை ஏற்படுத்தும் ஒன்றாகவும் உள்ளது. 
 
தெற்கு சூடான், காமோராஸ், மாலாவி, போஸ்ட்வானா, புருண்டி, சியாரா லியோ, சவுவ் டோமே அண்ட் பிரின்சிலி ஆகிய ஆப்ரிக்க நாடுகளும், ஆசியாவில் வடகொரியா, மியான்மர், தஜ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளும், பசிபிக் பெருங்கடலில் உள்ள குட்டி தீவுகள் சிலவற்றிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.