திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2025 (10:29 IST)

ஒரு மணி நேரம் லிப்டில் சிக்கிய கடலூர் காங்கிரஸ் எம்பி.. தீயணைப்பு துறையினர் மீட்பு..

கடலூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. லிப்ட்டில் ஒரு மணி நேரம் சிக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத், வடலூரில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது, அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் லிப்டில் ஏறி கட்சி அலுவலகத்தின் இரண்டாம் மாடிக்கு சென்றனர்.

அந்த நேரத்தில் திடீரென லிப்ட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றுவிட்டது. இதனை தொடர்ந்து விடுதி ஊழியர்கள் அவசரமாக மாற்றுச்சாவியை பயன்படுத்தி லிப்டை திறக்க முயன்றனர். ஆனால், அது வெற்றியளிக்கவில்லை.

இதையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கதவை உடைத்து, எம்.பி. விஷ்ணு பிரசாத் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகளை மீட்டனர். பின்னர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.

மூன்று பேர் மட்டுமே செல்லக்கூடிய லிப்டில் ஆறு பேர் சென்றதே கோளாறுக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Edited by Mahendran