புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (08:59 IST)

தீவிரமடையும் கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

சீனாவிலிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை 80 பேர் இந்த வைரஸால் இறந்துள்ள நிலையில் இறந்தவர்களில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாம்பு மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில் ஒருவருக்கு ஒருவர் கை கொடுப்பதாலேயே வைரஸ் பரவி விடும் அபாயம் இருப்பதாக சீன மருத்துவ ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.

வைரஸ் பரவிய வுகான் மற்றும் சுற்றியுள்ள 12 நகரங்களில் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துமனையை கட்ட சீன அரசு பணிகளை முடுக்கியுள்ளது.

ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகள் முதல் அமெரிக்கா வரை இந்த வைரஸின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு சரியான தடுப்பு மருந்து கண்டறிய பல நாட்டு ஆய்வாளர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.