ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (10:07 IST)

கொரோனா வைரஸ் தாக்கம்... சீனாவில் தவிக்கும் தமிழர்கள் !

சீனாவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸால் ஹூபே மாகாணத்தில் மட்டும் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்த வைரஸ் உண்டாக்கிய நோய் தொற்றால் சீனா முழுவதும் 41 பேர் இறந்திருப்பதும், 1287 பேர் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதம் முதல் முறையாக இந்த வைரஸ் பரவத் தொடங்கியது.
 
வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். வுஹான் நகரில் பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நகரில் புதிய மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், கொரோனோ வைரஸ் தாக்குதல் எதிரொலியால் சீனாவில் இருக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
மக்களி உயிரைப் பறித்துவரும் இக்கொடூர வைரஸினால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.