செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (14:22 IST)

தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு: சீனாவில் கடும் கட்டுப்பாடுகள்!

china corona
சீனாவில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கொரோனா  வைரஸ் முதல் முதலில் சீனாவில் தான் தோன்றியது என்பதை அடுத்து இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் உலக நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களாக சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு தினசரி 10 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சீனாவின் தலைநகர் பீஜிங் உள்பட பல பகுதிகளில் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது 
 
இதனால் மீண்டும் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறி உள்ளன. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் காவல்துறை கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran