தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஊடகப்பிரிவுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
கரூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஊடகப்பிரிவுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள ஊடகப்பிரிவு நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கலந்தாய்வு கூட்டமானது, கரூர் நகரில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஜோதி குமரவேல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் கிராமங்கள் தோறும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கட்சி நடத்திய அனைத்து போராட்டங்கள் குறித்தும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கொண்டு செல்வதென தீர்மானிக்கப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மண்டல உறுப்பினர் தமிழரசன், மாநில அமைப்பாளர் குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.