1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 19 மார்ச் 2017 (11:11 IST)

706 கேரட் வைரத்தை கண்டுபிடித்த பாதிரியார் என்ன செய்தார் தெரியுமா??

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனில், 706 கேரட் மதிப்புள்ள மிகப்பெரிய வைரத்தை பாதிரியார் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.


 
 
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனின் கிழக்குப் பகுதியில் உள்ள சுரங்கத்தில் வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 
 
இந்தச் சுரங்கத்தில் இமானுவேல் மோமோ என்ற கிறிஸ்தவ பாதிரியாரும் வேலை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுரங்கத்தில் இவர் மிகப்பெரிய வைரத்தைக் கண்டுபிடித்தார். அது 706 கேரட் உடையது என தெரிய வந்தது.
 
மேற்கு ஆப்பிரிக்க சுரங்கத்தில் கிடைத்த 10-வது மிகப்பெரிய வைரம் என்று இது என்று கருதப்படுகிறது. இந்த வைரத்தை சியாரா லியோனின் அதிபரான டாக்டர் எர்னஸ்ட் பாய் கோராமாவிடம் ஒப்படைத்தார்.