வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (10:31 IST)

வெட்டிங் லோன்.. திருமண கடன் வழங்கும் மேட்ரிமோனியல் இணையதளம்..!

வீடு, பைக், கார் வாங்க ஏராளமான வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் லோன் வழங்கி வரும் நிலையில், தற்போது முதல் முறையாக சென்னை சேர்ந்த மேட்ரிமோனியல் நிறுவனம் ஒன்று திருமண கடன் வழங்கும் வெட்டிங் லோன் என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
 
இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேட்ரிமோனி டாட் காம் என்ற இணையதளம் ஏற்கனவே பிரபலம் என்பதும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இந்த நிறுவனம் வெட்டிங் லோன் என்ற புதிய முயற்சியை எடுத்துள்ளது. ஐடிஎப்சி, டாட்டா கேப்பிட்டல், L&T பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த லோன் முயற்சியை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
திருமணம் செய்ய விரும்பும் தம்பதிகள் இந்த லோனுக்கு அப்ளை செய்யலாம் என்றும், குறைந்த வட்டி மற்றும் வெளிப்படை தன்மையுடன் இருக்கும் என்றும் மேட்ரிமோனி நிறுவனம் இதுகுறித்து கூறியுள்ளது.
 
கடன், அதன் வட்டி விகிதம், திரும்ப செலுத்தும் ஆண்டுகள் போன்ற விவரங்களை வாடிக்கையாளர்கள் வெட்டிங் லோன் எடுக்கும் போது அறிந்து கொள்ளலாம் என்றும், இதன் மூலம் திருமண செலவுக்காக ஒரு பெரிய தொகையை அநியாய வட்டிக்கு கடன் வாங்காமல், குறைந்த வட்டியில் பெற்று திருமணத்தை திருப்தியாக முடித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran