வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (09:39 IST)

இன்று 21 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், இன்று 21 மாவட்டங்களில், அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Edited by Mahendran