செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (12:08 IST)

கொரோனா ஆபத்தில்லாத நோய்; கட்டுப்பாடுகள் தளர்வு! – சீனாவின் முடிவால் அதிர்ச்சி!

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அதை ஆபத்தில்லாத நோயாக சீனா அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் சமீபமாக மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால் மற்ற நாடுகளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவை ஆபத்தில்லாத நோயாக சீனா அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனாவால் கடந்த 3 ஆண்டுகளாக பல கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சமீபத்தில் சீனாவில் நடந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சில இடங்களில் சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது.


இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை ஆபத்தில்லாத நோயாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளும் முழுவதுமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. ஜனவரி 8 முதல் சீனா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சோதனை, தனிமைப்படுத்துதல் கிடையாது என கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த போக்கு மற்ற நாடுகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K