ட்ரம்பின் மூக்கை சேர்ந்து உடைத்த இந்தியா - சீனா!!
இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பதற்கு ட்ரம்ப் முன்வந்ததை நிராகரித்துள்ளது சீனா.
இந்தியா – சீனா இடையே லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. எல்லைப்பகுதியில் இந்தியா சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதை சீனா எதிர்த்து வருகிறது. அதேசமயம் சீனா இராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் எல்லையில் குவித்து வருகிறது.
இந்த மாதத்தில் மட்டும் இருமுறை சீன வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே கைகலப்பு சண்டை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் இந்தியாவும் எல்லைப்பகுதியில் இராணுவத்தை பலப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது. நடுவராகவோ அல்லது தூதராகவே இருந்து எல்லைப் பிரச்னையை தீர்க்கத் தயார் என்று கூறியிருந்தார்.
இதனை முன்னதாகவே இந்தியா மறுத்துவிட்ட நிலையில் மெளனம் காத்து வந்த சீனாவும் தற்போது எல்லை பிரச்சனையை நாங்களே பேசி தீர்த்துக்கொள்கிறோம் என கூறியுள்ளது.
இதன் மூலம் அதிபர் ட்ரம்ப் தேவையில்லாமல் இந்த பிரச்சனையில் மூக்கை நுழைத்து அவமானப்பட்டுள்ளார்.