செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (17:20 IST)

5 மாநிலங்களில் இருந்து விமானம் வர தடை விதித்ததா கர்நாடகா?

தமிழம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்குள் விமானம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2148 ஐ தாண்டியுள்ளது. அங்கு இதுவரை 48 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அங்கு பேருந்து தொடங்குவது குறித்து முதல்வர் எடியூரப்பா அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 30 பேர்களை மட்டும் கொண்டு பேருந்துகளை இயக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்போது உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகனங்களுக்குக் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது உண்மையில்லை என அம்மாநில அரசு மறுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் இருந்து குறைவான அளவில் விமானங்கள் இயக்கவேண்டும் என்று மட்டுமே கோரிக்கை வைத்ததாகக் கூறியுள்ளது.