புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 27 ஜனவரி 2020 (15:38 IST)

உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் சீனாவின் பயோ ஆயுதமா?

சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரோனா வைரஸ் இருக்கலாம் என இஸ்ரேல் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை 80 பேர் இந்த வைரஸால் இறந்துள்ள நிலையில் சீனாவின் 19 நகரங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, சீனாவில் மட்டும் 2,744 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதகாவும், அதில் 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.  
 
சீனா மட்டுமின்றி ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகள் முதல் அமெரிக்கா வரை இந்த வைரஸின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.  வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.  
 
இதற்கு சரியான தடுப்பு மருந்து கண்டறிய பல நாட்டு ஆய்வாளர்களும் முயற்சி செய்து வருகின்ற நிலையில்,  உலக நாடுகளுக்கு தெரியாமல் சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரோனா வைரஸ் இருக்கலாம் என இஸ்ரேல் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து தி வாசிங்டன் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், உலக நாடுகளுக்கு எதிராக சீன அரசு மறைமுகமாக ப்யோ ஆய்வு கூடங்களை உருவாக்கி அதில் உயிர் கொல்லும் வைரஸ்களை உருவாக்கி வந்தது என ஒரு ஆய்வு கட்டூரையின் மூலம் தெரிந்துக்கொண்டேன். 
 
இந்த கொரோனா வைரைஸ் அப்படிப்பட்ட ஒரு வைரஸாக இருக்கலாம். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மூலமாகவோ அல்லது ஆய்வுக்கூட கசிவு காரணமாகவோ வரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கிறேன். இருப்பினும் இதற்கான ஆதரங்கள் ஏதும் எண்ணிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.