வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (11:26 IST)

செக்கெண்ட் ஸ்டேஜில் கொரானா வைரஸ்: அபாயம் காத்திருக்கு எச்சரிக்கும் நர்ஸ்!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,000-க்கும் அதிகமாக உள்ளதாக பெண் செவிலியர் வீடியோ வெளியிட்டுள்ளார். 
 
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை 80 பேர் இந்த வைரஸால் இறந்துள்ள நிலையில் இறந்தவர்களில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 
 
வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில் ஒருவருக்கு ஒருவர் கை கொடுப்பதாலேயே வைரஸ் பரவி விடும் அபாயம் இருப்பதாக தெரிகிறது. 
 
வைரஸ் பரவிய வுகான் மற்றும் சுற்றியுள்ள 12 நகரங்களில் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துமனையை கட்ட சீன அரசு பணிகளை முடுக்கியுள்ளது.
 
ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகள் முதல் அமெரிக்கா வரை இந்த வைரஸின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு சரியான தடுப்பு மருந்து கண்டறிய பல நாட்டு ஆய்வாளர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாக பெண் செவிலியர் வீடியோ வெளியிட்டுள்ளார். 
 
மேலும் அந்த வீடியோவில், கொரோனோ வைரஸ் தற்போது இரண்டாம் நிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. முதல் நிலையில் வைரஸ் அறிகுறிகளை குணப்படுத்திவிடலாம். ஆனால் இரண்டாம் நிலையில் மிகவும் அபாயகரமான நிகழ்வுகள் வரப்போகிறது.
 
வைரஸ் பாதிக்கப்பட்ட நபரை தனிமைபடுத்தி உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ஒரே சமயத்தில் 14 பேருக்கு இந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.