1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (17:41 IST)

சிறுவர்கள் மீட்பு: தாய்லாந்து குகைக்கு சீல்!

தாய்லாந்து குகையில் 15 நாட்களாக சிக்கி தவித்து வந்த 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 
 
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற 10 கிமீ நீள குகை உள்ளது. கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியை சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகச பயணம் சென்றனர். இந்த சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார்.
 
இவர்கள் அந்த குகைக்கு சென்ற போது திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறும் குகையை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது.
 
இதனால் இவர்களை மீட்க பல முயற்சிகள் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் 8 சிறுவர்களை மீட்ட இவர், இன்று மீதமுள்ளவர்களை மீட்டனர். தற்போது அந்த குகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.