1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (15:35 IST)

இலங்கை மின்சார சபை தலைவர் ராஜினாமா: அதானி அழுத்தம் காரணமா?

resign
இலங்கை மின்சார சபை தலைவர் ராஜினாமா: அதானி அழுத்தம் காரணமா?
இலங்கை மின்சார சபை தலைவர் திடீரென ராஜினாமா செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இலங்கையில் உள்ள மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு தர் தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக இலங்கை மின்சார சபை தலைவர் பெர்னாண்டோ என்பவர் புகார் தெரிவித்துள்ளார்
 
இந்த அழுத்தம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இலங்கையில் உள்ள அனைத்து மின்சார திட்டத்தையும் அதானி குழுமத்திடம் கொடுக்க வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்தியதாக புகார் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ராஜினாமா அதனை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது