வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (22:07 IST)

இந்திய அரசியல் கட்சிகளுக்கும் வேலை செய்தோம்: ஒப்புக்கொண்டது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா

இங்கிலாந்து நாட்டின் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஒரு செயலி மூலம் ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திரட்டி டிரம்ப் ஆதரவாளர்களுக்கு அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவை தன்னுடைய தளத்தில் இருந்து நீக்கிய பேஸ்புக், இதற்காக மன்னிப்பு கேட்டதோடு இனியும் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் மட்டுமின்றி இந்தியாவில் நடந்த தேர்தல்களிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுகுறித்து இந்திய பத்திரிகையாளர்கள் பலரின்  கேள்விகளுக்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் விசில் ப்ளோவர்’ கிறிஸ்டோபர் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர்தனது டுவிட்டரில் ஆம், இந்திய அரசியல் கட்சிகளுக்காகவும் நாங்கள் வேலை செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கும் வேலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் இன்னும் ஒருசில கட்சிகளின் பெயர்களை வெளிப்படையாக கூறவில்லை என்றும் அவ்வாறு கூறினால் பெரும் பரபரப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.