செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 மார்ச் 2018 (18:50 IST)

ஏப்ரல் 7ஆம் தேதிக்கு பின்னர் ஃபேஸ்புக் இந்தியாவில் இருக்குமா? அதிர்ச்சி தகவல்

சமிபத்தில் தகவல் திருட்டு சர்ச்சையில் சிக்கி கொண்ட ஃபேஸ்புக், பங்குகளின் வீழ்ச்சி காரணமாக பல ஆயிரம் கோடி டாலர்களை இழந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது தகவல்திருட்டு நடந்ததை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டதோடு, இனிமேல் இதுபோன்ற நிகழ்வு இருக்காது என்றும் உறுதியளித்தது.

இருப்பினும் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் இது என்று பல முக்கிய பிரமுகர்கள் கூறி வருவதோடு ஒருசிலர் ஃபேஸ்புக்கின் கணக்கை முடித்து கொண்டனர். இந்த நிலையில் இந்திய தேர்தலிலும் ஃபேஸ்புக் தகவல் திருட்டில் ஈடுபடவுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தின. இதுகுறித்து மத்திய அரசு ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது

இந்த நிலையில் தகவல் திருட்டு தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க மத்திய அரசு உத்தரவு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து திருப்தி அளிக்கும் வகையிலான விளக்கம் வரவில்லை என்றால் ஃபேஸ்புக்கை இந்தியாவில் தடைசெய்யவும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.