வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 24 மார்ச் 2018 (11:39 IST)

நீதிமன்றம் உத்தரவையடுத்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தில் சோதனை

லண்டன் நீதிமன்றம் உத்தரவையடுத்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 
 
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்காவில் வசிக்கும் 50 மில்லியின் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடி, டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தியதாக லண்டனில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் தலைமை அலுவலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
 
இது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அளித்த பேட்டியில், பேஸ்புக் பயணாளிகளின் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான் என தெரிவித்தார். இதனால் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடிய புகாரில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தை லண்டன் தகவல் ஆணையர் விசாரித்து வந்தார்.
 
இந்நிலையில், லண்டன் நீதிமன்றம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தை சோதனையிட உத்தரவிட்டது. இதனையடுத்து, லண்டன் தகவல் ஆணையர் தலைமையில் அமலாக்கபிரிவினர் அங்கு சோதனையில் ஈடுபட்டி வருகின்றனர்.