புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 மே 2020 (12:55 IST)

கொரோனா இறப்பு: ஸ்பெயினை முந்தியது பிரேசில்!!

தொற்று எண்ணிக்கையில் உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.
 
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலகளவில் கொரோனா தொற்று 60 லட்சத்தை (60,26,375) தாண்டியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,66,418 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் குணமடைந்தோர் எண்ணிக்கை 26,56,144 ஆக அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.  
 
உலகில் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் 17.93 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அந்நாட்டில் மட்டும் கொரோனாவுக்கு 1,04,542 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் பிரேசில் ஸ்பெயினை முந்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1,124 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 27,878 ஆக அதிகரித்துள்ளது.
 
ஸ்பெயினில் இதுவரை 27,121 பேர் இறந்துள்ளனர். தொற்று எண்ணிக்கையில் உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.