வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (15:50 IST)

நான் சொன்னது நடக்கலைனா உயிரை விடவும் தயார் – பிரதமரின் அதிரடி பேச்சு

ப்ரெக்ஸிட் விவகாரத்தில் தான் சொன்னப்படி வெற்றிபெற முடியாவிட்டால் தன் உயிரை விடவும் தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகுவதாக 2016ம் ஆண்டு முடிவு செய்தது. அப்போது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் சரியான தீர்வு எட்டப்படவில்லை. எதிர்க்கட்சிகள் பலர் ப்ரெக்ஸிட் தீர்மானத்துக்கு எதிராக நின்றதால் பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளானது.
இதனால் அப்போது பிரதமராக பொறுப்பு வகித்து வந்த தெரசா மே பதவி விலகினார். அவரது பதவி விலகலுக்கு பிறகு போரிஸ் ஜான்சன் பதவி ஏற்றுள்ளார். ஆனால் ஜான்சனாலும் பிரெக்ஸிட் தீர்மானத்தில் சரியன முடிவை எட்ட முடியவில்லை. எதிர்கட்சிகள் ப்ரெக்ஸிட் தீர்மானத்துக்கு எதிராக இருப்பதால் ஜான்சனுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.


இது குறித்து இங்கிலாந்து மக்களவையில் பேசிய போரிஸ் ஜான்சன் “அக்டோபர் 31க்குள் பிரெக்ஸிட் தீர்மானம் நிறைவேற்றப்படும். இல்லையென்றால் எனது உயிரையும் விட தயாராக உள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

ஒருவேளை அக்டோபருக்குள் ஜான்சனால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அவர் பதவி விலக நேரிடலாம் என்று கூறப்படுகிறது.