வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (17:53 IST)

AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: பில்கேட்ஸ் சொல்லும் விளக்கம்..!

ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகும் போதும் அந்த தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற செய்தியும் மக்கள் மத்தியில் அச்சப்படுத்தி வருகிறது,.

அது போல தான் AI தொழில்நுட்பமும் வேலை வாய்ப்பை பறிக்கும் என்று கூறப்படும் நிலையில் பில்கேட்ஸ் வேறு விதமாக கூறியுள்ளார்.  ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த  அச்சம் வரத்தான் செய்யும். ஆனால் அதனால் வேலை வாய்ப்புகள் காலியாகும் என்பது உண்மை கிடையாது.

1900ஆம் ஆண்டுகளில் விவசாய உற்பத்தியை தாண்டி எதுவும் இருக்காது என்று நினைத்த நிலையில் விவசாய வேலைகளை தாண்டி பல புதிய வேலைகளை உருவாக்கி உள்ளோம்


AI தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை எளிதாகும். மக்களின் வாழ்க்கையை இது எளிதாக்குவதோடு  வேகமாகவும் செய்ய முடியும். அதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளும் இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படும். மேலும் இதை பயன்படுத்துவது மிகவும் எளிது.

இதற்கான தனியாக ஒரு கருவிகள் தேவையில்லை. ஏற்கனவே நாம் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலை வைத்தே இந்த AI தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

Edited by Mahendran