1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:58 IST)

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு இழக்க வாய்ப்புகள் உண்டு: பிடிஆர் பழனிவேல்

ஏஐ தொழில்நுட்பத்தால் ஒரு சில வேலை வாய்ப்புகள் அதிகரித்தாலும் இந்த தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு இழக்கும் நிலையும் உண்டு என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  
 
செயற்கை தொழில்நுட்பத்தை சேர்ந்த பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக உலக  முதலீட்டாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செயற்கை நுண்ணறிவு மூலம் ஏறத்தாழ 100 பேர் செய்யும் வேலையை ஒரு தொழில்நுட்பத்தை செய்துவிடும் என்பதால் வேலை இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

 
செயற்கை தொழில்நுட்பதால் பல புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும் அதனால் வேலை இழப்புகளும் நேரிடும் என்பது தான் உண்மை.  ஆனால் அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பல நல்ல விஷயங்களை செய்வதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளது என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
 
Edited by Siva