புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 நவம்பர் 2018 (17:55 IST)

ஏமாற்றிய காதலனை கொன்று கறிசமைத்த காதலி !

பலவருடமாக காதலித்து வந்த காதலன் தன்னை ஏமாற்றியதால் விரக்தி அடைந்த பெண் ஒருவர் காதலனையே கொன்று கறிசமைத்த சம்பவம் சவூதி அரேபியாவில் திகிலை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் வசித்து வந்த மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் (40)அதே நாட்டிலிருந்து இங்கே வேலைக்கு வந்திருக்கும் ஒரு இளைஞருக்கும் (30) பல வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருந்ததை அறிந்துகொண்ட காதலி அவரை தன் வீட்டுக்கு விருந்துக்கு வரச்சொல்லி இருக்கிறார்.
 
சொன்னது போல வீட்டுக்கு வந்த காதல்னை மூர்ச்சையாகும் வரை அடித்து கொன்று காதலனை கத்தியால் கண்டத்துண்டமாக வெட்டி ,அறுத்து , பாத்திரத்தில் அரிந்து போட்டு அடுப்பில் வேகவைத்து பின்  கறியாகச் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்.
 
இது நடந்து பல மாதங்களுக்கு பிறகு காணாமல் போன வாலிபர் பற்றி போலீஸார் துப்பு துலங்கியபோது காதலியே காதலனைக்கொன்று நாடமாடியது தெரியவந்தது.
 
இதனையடுத்து அந்த கொலைகாரியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.