வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (17:20 IST)

பேச மறுத்த காதலியை கத்தியால் குத்திய காதலன் !

காதலித்து பழகிவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலியின் வீடு புகுந்து கொன்ற காதலன் தானும் தற்கொலைக்கு முயன்றதால்  திருவொற்றியூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திருவொற்றியூர் அருகே உள்ள சாத்துமா நகரை சேர்ந்தவர் வேணூகோபாலுக்கு பாரதி(25) என்ற மகள் உள்ளார்.
 
இடைநிலை ஆசிரியர்  பயிற்சி முடித்துள்ள பாரதி புதுவண்ணாரப்பெட்டையில் உள்ள இருசர்க்க வாகன ஷோரூமில் பணியாற்றிய போது மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி 28  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
 
பின் பாலாஜியின் நடவடிக்கை தனக்கு பிடிக்காத காரணத்தால் அவரிடமிருந்து விலகிக்கொண்டார். பேசுவதையும் தவிர்த்து வந்தார்.
 
இந்நிலையில் பாரதி தன்னுடன் பேசாததால் ஆத்திரம் அடைந்த பாலாஜி நேற்று இரவு பாரதியின் வீட்டுக்கு சென்று தூங்கிக்க்கொண்டிருந்த அவரை தான் கொண்டு வந்த கத்தியால் கழுத்தை அறுத்துக்  கொன்றார்.
 
பாரதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார். அதன் பின்  
அவரது பெற்றோர் அலறித்துடித்துக் கொண்டு உடனே அருகே உள்ளே மருத்துவமனையில் பாரதியை சேர்த்தனர்.
 
கொடூர பாலாஜி அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்குச் சென்று மது வாங்கி அதில் விஷத்தை கலக்கி குடித்துள்ளார். பிறகு அவரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
தனக்கு கிடைக்காத காதலி ( பாரதி) வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கிற பாலாஜியின்  சுயநல எண்ணம்தான் பாரதியை இந்த கொலை செய்யதூண்டலுக்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.