திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (06:55 IST)

பிபிசி தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்த சீனா: என்ன காரணம்?

பிபிசி தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்த சீனா: என்ன காரணம்?
சீனாவில் இனி பிபிசி தொலைக்காட்சி சேவைகளுக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக சீன அரசு தடைவிதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பிபிசி தொலைக்காட்சி சீனாவில் தொடர்ந்து ஒளிபரப்ப அனுமதி கிடையாது. பிபிசியின் புதிய வருடாந்திர விண்ணப்பத்தையும் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது
 
மேலும் அந்த அறிக்கையில் சீனாவைப் பற்றிய செய்தி அறிக்கைகள் உண்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் சீனாவின் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும் சீன அரசு வெளியிட்டுள்ள ஒளிபரப்பு வழிகாட்டுதல்களை பிபிசி நிர்வாக மீறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
சீனாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் அடிப்படையில் இனிமேல் சீனாவில் பிபிசி தொலைக்காட்சி சேவைகள் இயங்காது என்று தெரிகிறது.