1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 மே 2025 (18:06 IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

Arrest
இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலில், பீகார் மாநிலத்தில் சீனாவை சேர்ந்த நால்வர் இந்திய எல்லையை தாண்டியதால் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
 
பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கிடையே சூழல் மேலும் பதற்றமாகியுள்ளது.
 
இந்த பரபரப்பான சூழலில், பீகாரின் ரக்சௌல் பகுதியில் உள்ள மைத்ரி பாலம் அருகே, 4 சீனர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர்கள் டேன் விஜோன், லின் யுங்காய், ஹே யுன் ஹேன்சென் மற்றும் குவாங் லிங் என்பதும் தெரியவந்துள்ளது.
 
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “அவர்களை தொடர்ந்து விசாரித்து வருகிறோம். அவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்,” என்று தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran