உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?
உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் நிலையில், இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு உலக வங்கி அளித்து வரும் நிதி உதவியை நிறுத்த வலியுறுத்தப்படும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலக வங்கி குழு தலைவர் அஜய் பங்கா இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இதையடுத்து, அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியா–பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் பண உதவியை நிறுத்த இந்தியா வலியுறுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது நடந்துவிட்டால், பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை மிகப் பெரிய அளவில் சிக்கலாகிவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரை அடுத்து, மேலும் சில இந்திய பிரபலங்களை உலக வங்கி தலைவர் சந்திக்க இருப்பதாகவும், அப்போது முக்கிய பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva