திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2024 (13:19 IST)

ஃபேஸ்புக், இன்ஸ்டா, டிக்டாக் பயன்படுத்த தடை: ஆஸ்திரேலிய அரசு ஆலோசனை..!

facebook ,insta
16 வயதிற்கு உட்பட்டவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளம் சிறார்கள், குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்டவர்கள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால், சிறுவர்கள் இந்த செயலிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சட்டம் உருவாக்க ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மிக மோசமான உள்ளடக்கங்கள் சமூக வலைதளங்களில் இருப்பதால் அவற்றை குழந்தைகள் பார்க்கும்போது மன அளவில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே பேஸ்புக் போன்றவற்றை 16 வயதிற்கு உட்பட்டவர்கள் பார்ப்பதற்கு தடை செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்படுகிறது.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர், "நான் எனது கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது எனக்கு தேவையில்லாத சில விஷயங்கள் திரையிலே தோன்றுகின்றன. இதுவே 14 வயது குழந்தைக்கு நேர்ந்தால் என்ன ஆகும்? இதை யோசித்து தான் இந்த சட்டத்தை கொண்டு வர முடிவு செய்தேன்," என்று கூறினார். இந்த சட்டம் இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.


Edited by Mahendran